search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் நிறுத்தம்"

    காரிமங்கலம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன் கிழமை) நடைபெறுவதால், மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    காரிமங்கலம், நெடுங்கல், அனுமந்தபுரம், திண்டல், அண்ணாமலைஅள்ளி, பந்தாரஅள்ளி, தும்பல அள்ளி, எச்சனஅள்ளி, கெண்டிகானஅள்ளி, கே.மோட்டுப்பட்டி, பெரியாம்பட்டி, பெரியமிட்ட அள்ளி, மாட்லாம்பட்டி, பூமாண்டஅள்ளி, பண்ணந்தூர், காளப்பன அள்ளி, வேலம்பட்டி, பைசுஅள்ளி, நாகரசம்பட்டி, கோவிலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. 

    இவ்வாறு செயற் பொறியாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    திருமங்கலம் பகுதியில் வருகிற 21-ந்தேதி மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    பேரையூர்:

    தே.கல்லுப்பட்டி துணை மின் நிலையத்தில் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் தே.கல்லுப்பட்டி, குன்னத்தூர், காடனேரி, எம்.சுப்புலாபுரம், வில்லூர், கள்ளிக்குடி, புளியம்பட்டி, புளியங்குளம், வையூர், சென்னம்பட்டி, ஆவல்சூரம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை திருமங்கலம் மின் வினியோக செயற் பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல் நகர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி மின்னல்களுடன் சூறாவளி காற்று வீசி வருகிறது. மழை வருவதுபோல் ஏமாற்றி செல்கிறது.

    பலத்த காற்று வீசுவதால் மின் வயர்கள் சேதம் அடைந்து அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் இருளில் தவித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க பராமரிப்பு பணிக்காகவும் மின் தடை ஏற்படுத்தப்படுகிறது.

    ஆனால் கடந்த சில நாட்களாக எந்தவித முன் அறிவிப்பும் இன்றி 2 முதல் 3 மணி வரை மின் தடை அமல்படுத்தப்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இரவு நேரங்களில் தூங்க முடியாமல் கொசுக்கடியும் சேர்ந்து இருப்பதால் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சிறு தொழில்களும் மின் தடையால் பாதிக்கப்பட்டு வருகிறது.

    எனவே இது குறித்து மின்சாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. எனவே இதுபோன்ற காரணங்களால் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வருகிறது. இருந்தபோதும் திண்டுக்கல் நகர் பகுதியில் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    வில்லாபுரம் பகுதிகளில் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    மதுரை:

    மதுரை மேற்கு மின் வினியோக செயற்பொறியாளர் ராஜா காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாயின் மேற்கு பகுதிகள் எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர் பகுதிகள், ஜெய்ஹிந்த்புரம் மற்றும் 2-வது மெயின் வீதி, பாரதியார் ரோடு, ஜீவாநகர் 1 மற்றும் 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1-வது மற்றும் 3-வது தெரு, அருணாசலம் பள்ளி பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

    மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஆரப்பாளையம் பகுதியில் 16-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மின் வினியோக செயற்பொறியாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆரப்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் கீழஆவணி மூலவீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரகாரம், வடக்கு ஆவணி மூலவீதி, கீழமாசி வீதி, வெங்கலக்கடைத்தெரு, நேதாஜி ரோடு, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பல வீதி, கீழ சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கங்கம் பள்ளிவாசல் தெரு, யானைக்கல் பகுதி, திருமலைராயர் படித்துறை பகுதி, வடக்கு வெளி வீதி தெற்கு பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

    இதே போல் புட்டுத் தோப்பு ரோடு, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், பொன்னகரம் பகுதி, அழகரடி, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திரா மெயின் ரோடு, மேலப்பொன்னகரம் மெயின்ரோடு ஒரு பகுதி, பொன்னகரம் ஒர்க்சாப் ரோடு, கனகவேல் காலனி, ஆறுமுகச்சந்தி, ஆட்டுமந்தை பொட்டல், சிம்மக்கல், வடக்கு வெளி வீதி, ராஜா மில் ரோடு, ஸ்காட் ரோடு, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, காலேஜ் ஹவுஸ் வரை மற்றும் எல்.ஐ.சி. ஆபீஸ் ரோடு, நேதாஜி தெரு, பாலம் ஸ்டேசன் ரோடு, அய்யனார்கோவில் மெயின், அய்யனார் கோவில் விசாலம், தாகூர் நகர் பகுதி, மகான் காந்தி ரோடு மேற்கு பகுதி, அகிம்சாபுரம் மேலத் தெரு மற்றும் முதல் தெரு பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    வேடசந்தூர் பகுதியில் இரவு நேர மின் தடையால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தூக்க மின்றி அவதிப்படுகின்றனர்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே உள்ள விடுதலைப்பட்டி, ரெங்கநாதபுரம், காசிபாளையம், எத்திராம் பட்டி, கல்வார் பட்டி, எல்லப்பம் பட்டி, கோவில் பட்டி, கல்லுப்பட்டி, மாங்கலா புரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    சுமார் 2 முதல் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். பகல் வேளையிலும் மின் தடை ஏற்படுவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரவு வேளையில் மின்சாரம் இல்லாததால் திருட்டு பயம் அதிகரித்துள்ளது.

    சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள 24 மணி நேரமும் மின் விசிறியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய வேளையில் மின்சாரம் தடைபடுவதால் போதுமான காற்றோட்டமின்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தூக்க மின்றி அவதிப்படுகின்றனர்.

    மேலும் மின் தடையினால் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சீரான மின் வினியோகம் செய்ய மின் வாரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    பர்கூர் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சுற்றுவட்டார பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பர்கூர் நகர் பகுதி, சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவி நாயனப்பள்ளி, சின்ன மட்டாரப்பள்ளி, கந்திகுப்பம், குரும்பர்தெரு, நேரலகுட்டை, குண்டியால்நத்தம், சிகரலப்பள்ளி, கப்பல் வாடி, ஊ.மு.பட்டி, வெங்கட்ட சமுத்திரம், அங்கி நாயனப்பள்ளி,

    தொகரப்பள்ளி, பில்லக்கொட்டாய், பெருகோ பனப்பள்ளி, ஆடாலம், ஜெகதேவி, சத்தலப்பள்ளி, ஜி.என்.மங்கலம், கொல்லப்பட்டி, சிப்காட், அச்சமங்கலம், பாகிமானூர், கொண்டப்பநாயனப்பள்ளி, பண்டசீமனூர், மஜீத்கொல்ல அள்ளி, ஐகுந்தம், மோடிகுப்பம், அஞ்சூர், செந்தாரப்பள்ளி, நாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதியில் நாளை (செவ்வாய்கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    மதுரை:

    மதுரை தெற்கு மெட்ரோ மின் வினியோக செயற்பொறியாளர் ராஜாகாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அனுப்பானடி மற்றும் தெப்பக்குளம் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் ராஜூவ் நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால்பண்ணை, விரகனூர், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், கல்லம்பல், சிலைமான், புளியங்குளம், கீழடி, சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய்நகர், கங்கா நகர், ஹவுசிங்போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி, தெப்பம்ரோடு, அனுப்பானடி கிழக்கு, மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டிதொழு, சீனிவாசபெருமாள் கோவில் தொரு, சின்னகண்மாய், பாலரெங்கபுரம், சண்முக நகர்,

    நவரத்தினபுரம், பிஸசர்ரோடு, இந்திராநகர், பழையகுயவர் பாளையம் ரோடு, லெட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிகாரத் தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், ராஜிவ் காந்தி தெரு, மேல அனுப்பானடி, கிழக்குபகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    திருமங்கலம் பகுதியில் 15-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பேரையூர்:

    திருமங்கலம் மின் வினியோக செயற்பொறியாளர் ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமங்கலம் துணை மின் நிலையத்தில் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் திருமங்கலம் நகர் பகுதிகள், உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    கப்பலூர் துணை மின் நிலையத்திலும் 15-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே அந்த சமயத்தில் கப்பலூர், கப்பலூர் பகுதி தியாகராஜர் மில், உச்சப்பட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தருமபுரி பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    தருமபுரி:

    தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் சிவானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தருமபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, தருமபுரி நகரத்திற்குட்பட்ட பஸ் நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஹள்ளி, ரெயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஹள்ளி, விருபாட்சி புரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் காலனி, அம்பேத்கர்காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு மற்றும் ராஜாப்பேட்டை, வெள்ளோலை, சோலைக் கொட்டாய், முக்கல் நாய்க்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூர், கடகத்தூர், மூக்கனூர், பழைய தருமபுரி, குண்டல்பட்டி, கிருஷ்ணாபுரம், இண்டமங்கலம், கன்னிப் பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    உசிலம்பட்டியில் 16-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி மின் வினியோக செயற்பொறியாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    உசிலம்பட்டி, தும்மக் குண்டு, இடையபட்டி, மொண்டிக்குண்டு, சின்னக் கட்டளை, எழுமலை மின் நிலையங்களில் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே அந்த நேரத் தில் உசிலம்பட்டிநகர், நக்கலப்பட்டி, தொட்டப்ப நாயக்கனூர், மேக்கிலார் பட்டி, கீரிபட்டி, சிந்து பட்டி, தும்மக்குண்டு, வேப்ப னூத்து, பூதிப்புரம், வடுக பட்டி, போத்தம்பட்டி, சின்னக்கட்டளை, சேடப் பட்டி, குப்பல்நத்தம், மங்கல் ரேவ், எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப் பட்டி, வகுரணி, அயோத்தி பட்டி, அல்லிகுண்டம், பொம் மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம் பரணி, சென்னம்பட்டி, பர மன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராணம் பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பப்பட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார் பட்டி, பேரையூர் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    அதேபோல் எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, அதிகாரிப்பட்டி, எம்.கல் லுப்பட்டி, துள்ளுக் குட்டிநாயக்கனூர், டி.ராம நாதபுரம், உத்தப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, எஸ்.கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, பாறைப் பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில் நாயக்கனூர், எ.பெருமாள் பட்டி, மானூத்து, சாப்டூர், அத்திபட்டி, அணைக் கரைப்பட்டி, மெய்நத்தம் பட்டி, உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்து பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொட்டிக் குண்டு, பாப்பா பட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைபட்டி, வையம்பட்டி, லிங்கப்ப நாயக்கனூர், புதுக் கோட்டை, சீமானூத்து, துரைச்சாமிபுரம்புதூர் மற்றும் அதனை சார்ந்த ஊர்களிலும் மின் வினி யோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

    உடையாப்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. #Powercut

    சேலம்:

    சேலம், உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உடையாப்பட்டி, வித்யா நகர், அம்மாபேட்டை, பொன்னாமாபேட்டை, தில்லை நகர் வலசையூர், அயோத்தியா பட்டணம், மேட்டுபட்டி தாதனூர், வீராணம், ஏ.என். மங்கலம், செல்லியம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை உடையாப்பட்டி துணை மின்நிலைய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

    ×